For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நந்தன் நிலகேனி, மனைவிக்கு மொத்தம் ரூ. 7700 கோடி சொத்து இருக்காம்!

|

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தெற்கு பெங்களூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி நிலகேனி ஆகியோர் தங்களுக்கு ரூ. 7700 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான முழு சொத்துப் பட்டியலையும் நிலகேனி தம்பதி வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த நிலகேனி பின்னர் ஆதார் அட்டைத் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் காங்கிரஸில் சேர்ந்து விட்டார். காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தனது சொத்து விவரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

200 ரூபாயுடன் வாழ்க்கையை ஆரம்பித்தேன்

200 ரூபாயுடன் வாழ்க்கையை ஆரம்பித்தேன்

நிலகேனி, அவரது மனைவியின் சொத்து விவரத்தை வெளியிட்ட அவரது பி.ஆர். ஓ குழு நி்லகேனி கூறியதாக தெரிவித்தபோது, நான் 200 ரூபாயுடன் எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஐஐடியிலிருந்து அப்போதுதான் வெளியில் வந்தேன். ரூ. 10,000 முதலீட்டில் நாங்கள் இன்போசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

அடிமட்டத்திலிருந்து

அடிமட்டத்திலிருந்து

அடிமட்டத்திலிருந்து வந்த நான் இன்று ஒரு பெரும் நிறுவனத்தின் பெரும் வெற்றிக்குக் காரணமானவர்களில் ஒருவனாக நிற்கிறேன். எங்களது சொத்து மதிப்பு ரூ. 7700 கோடியாகும் என்று கூறியுள்ளார் நிலகேனி.

80 சதவீதம் ஷேர்கள்தான்

80 சதவீதம் ஷேர்கள்தான்

நிலகேனி மற்று் அவரது மனைவியின் சொத்துக்களில் 80 சதவீதம் இன்போசிஸ் நிறுவன பங்குளாகும்.

நிலகேனியிடம் 1.45 சதவீதம்

நிலகேனியிடம் 1.45 சதவீதம்

நிலகேனியிடம் 1.45 சதவீத பங்குகள் இருக்கிறதாம். ரோஹினியிடம் 1.3 சதவீத பங்குகள் உள்ளனவாம்.

சட்டவிரோதமாக சல்லிக் காசு கிடையாது

சட்டவிரோதமாக சல்லிக் காசு கிடையாது

என்னிடம் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட ஒரு காசு கூட கிடையாது. மேலும் எந்தவிதமான மறைமுகமான முதலீடும் இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி கிடையாது.

ரூ. 400 கோடி தானம்

ரூ. 400 கோடி தானம்

கடந்த 1999ம் ஆண்டு முதல் கணவனும், மனைவியுமாக சேர்ந்து இதுவரை ரூ. 400 கோடி அளவுக்கு தான, தர்மம், நன்கொடையாக வழங்கியுள்ளனராம்.

என் மனைவியை விட நான் ஏழையாச்சே

என் மனைவியை விட நான் ஏழையாச்சே

ஆனால் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அனந்தகுமார், தான் தனது மனைவி தேஜஸ்வினியை விட ஏழை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 5 முறை இத்தொகுதியில் எம்.பியானவர் அனந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் சொத்து இம்புட்டுத்தான்....

என் சொத்து இம்புட்டுத்தான்....

தனது சொத்து மதிப்பு ரூ. 51.12 லட்சம் என்று அனந்தகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு ரூ. 3.86 கோடிக்கு சொத்து உள்ளதாம். மொத்த குடும்பச் சொத்து ரூ. 4.4 கோடியாம்.

நாராயணமூர்த்தி மகள் சொத்து எவ்ளோ தெரியுமா...

நாராயணமூர்த்தி மகள் சொத்து எவ்ளோ தெரியுமா...

சரி, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி மகள் அக்ஷதாவுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா... ரூ. 1600 கோடிக்கு மேல் உள்ளதாம்.

English summary
Making his wealth public a day before stepping into the fray, Infosys co-founder and Congress candidate from Bangalore South, Nandan Nilekani has declared that he and his wife Rohini Nilekani have assets worth Rs 7,700 crore. "I started out with 200 rupees in my pocket, when I graduated from IIT; ...we founded Infosys with Rs 10,000," Nilekani's media team, quoting him, said. "Today, because of the success of a company built from scratch, Nandan and Rohini have assets of Rs 7,700 crore," a release issued by the media team said. His formidable opponent and five-time Lok Sabha member from Bangalore South, Ananth Kumar of BJP has declared himself poorer than his wife Tejaswani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X