For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவோயிஸ சிந்தாந்தம் மீது வெறுப்பு: சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் சரண்!!

வனப்பகுதி வாழ்க்கை அலுத்துப் போய்விட்டதாகவும் மாவோயிஸ சிந்தாந்தத்தை வெறுப்பதாகவும் கூறி சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் தீவிரவாதிகள் 9 பேர் அந்த மாவட்ட காவல்நிலையத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தனர் . சரண் அடைந்த 9 நக்சல்களும் வனப்பகுதி வாழ்க்கை அலுத்துப் போய்விட்டதாகவும், மாவோயிஸ சித்தாந்தத்தை வெறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Nine Maoists surrendered

இதுகுறித்து பீஜப்பூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மோஹித் ஹர்க் கூறியதாவது:

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.எல்.துருவ் முன்னிலையில் நக்சல்கள் 9 பேரும் சரண் அடைந்தனர். அவர்களுக்கு மறுவாழ்த்திட்ட நிதியின் கீழ் தலா 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் திட்டப்படி புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஆந்திரா எல்லையில் 20 சகாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பந்த் அழைப்புவிடுத்திருந்த நக்சல்களுக்கு இந்த சரண் பின்னடைவாக கருதப்படுகிறது.

English summary
Nine Maoists had surrendered at Bijapur in Chattisgarh dealing a major blow to the naxal movement which is observing a bandh to protest the encounter along the Andhra-Odisha border conducted recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X