For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 தடவை எம்.பி. பதவி வகித்த மாணிக்ராவ் காவித் தோல்வி

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: லோக்சபாவில் 9 முறை எம்.பி. பதவி வகித்த மத்திய அமைச்சர் மாணிக்ராவ் காவித், இந்த தேர்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் நந்துர்பர் (தனி) தொகுதியில் போட்டியிட்டவர் மத்திய இணை அமைச்சர் மாணிக்ராவ் காவித். இவர் ஏற்கனவே 9 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

மகராஷ்டிராவில் இவரது தேர்தல் வெற்றிகள் சாதனையாக கருதப்பட்டது. இந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட்டதால் 10 -வது முறை வெற்றி பெற்று இமாலய சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்பாராத விதமாக அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 26 வயது பாரதிய ஜனதா பெண் வேட்பாளர் ஹீனா காவித் வெற்றி கனியை பறித்தார்.

English summary
Twenty-six-year-old Heena Gavit, snatched Nandurbar seat from Congress veteran Manikrao Gavit, a nine-time MP and Union Minister of State for Social Development by 1 lakh votes in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X