For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்பயா வழக்கு.. கருணை மனுவால் ஏற்பட்ட சிக்கல்.. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் புது பிரச்சனை!

நிர்பயா வழக்கில் கருணை மனு அனுப்பி உள்ளதால் குற்றவாளிகளை தூக்கில் போட முடியாது, அதன் மீதான முடிவு தெரியும் வரை தூக்கில் போட முடியாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Supreme Court dismisses curative petition of two convicts

    டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளதால் குற்றவாளிகளை தூக்கில் போட முடியாது, அதன் மீதான முடிவு தெரியும் வரை தூக்கில் போட முடியாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நாட்டையே உலுக்கியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.

    Nirbhaya case: Death Sentence execution maybe get postponed due to Mukesh Singhs mercy petition

    இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த தூக்கு தண்டனை இந்த மாதம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு இருந்த சட்ட வாய்ப்பு எல்லாம் முடிந்துவிட்டது. இதில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு அளித்தனர்.

    என்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா!என்னை விடுங்கள்.. ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு போக தயார்.. மட விழாவில் சண்டை போட்ட எடியூரப்பா!

    இந்த வழக்கில் இரண்டு பேர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதனால் குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளி முகேஷ் சிங் தனியாக டெல்லி ஹைகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இவரின் மனு மீது இன்று விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் இவரின் மனுவை தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை டெல்லி ஹைகோர்ட் உறுதி செய்தது.

    தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது சரிதான். ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தூக்கு தண்டனையை இப்போது நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளது.

    ஏனென்றால், நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பி உள்ளார்.இவரை போலவே வழக்கில் மீதம் உள்ள மூவரும் விரைவில் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.கருணை மனு நிலுவையில் இருக்கும் போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது.

    இந்த கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. ஆனால் மனு அப்படி ஏற்றுக்கொள்ளப்படாமல் போனாலும் கூட, அதன்பின் மீண்டும் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 14 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதனால் இப்போதைக்கு இவர்கள் நான்கு பேரும் தூக்கு தண்டனை பெறுவது கடினம் என்கிறார்கள்.

    English summary
    Nirbhaya case: Death Sentence execution maybe get postponed due to Mukesh Singh's mercy petition to President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X