For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பயாவை சீரழித்தவர்களில் கொடூரமானவரான மைனருக்கு விடுதலையா?: பெற்றோர் கவலை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டையே அதிர வைத்த நிர்பயா பலாத்கார வழக்கில் கைது செய்ய்பட்ட மைனர் குற்றவாளி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இந்த மாத இறுதியில் விடுதலை செய்யப்படுகிறார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில் 17 வயது 6 மாதமான மைனர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலை

விடுதலை

மைனர் மீதான குற்றம் தனியாக விசாரிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து அந்த மைனர் இந்த மாத இறுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.

என்.ஜி.ஓ.

என்.ஜி.ஓ.

அவர் விடுவிக்கப்பட்ட பிறகு ஓராண்டுக்கு என்.ஜி.ஓ. ஒன்றின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் செய்யப்படாது என்று டெல்லி அரசு அறிவித்தது.

மோசமானவன்

மோசமானவன்

நிர்பயாவை கொடூரமாக பலாத்காரம் செய்து தாக்கியவர்களில் மைனர் தான் மோசமானவர் என்று நிர்பயாவின் பெற்றோர் கூறியும் பலனில்லை.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

விடுவிக்கப்பட்ட பிறகு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டேன் என்று மைனர் குற்றவாளியிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கலாமா என்று மத்திய உள்துறை அமைச்சகம் யோசனையில் உள்ளது.

கோபம்

கோபம்

23 வயது மகளை சீரழித்து தாக்கிய குற்றவாளிகளில் ஒருவர் விடுதலையாகி பிறரை போன்று சுதந்திரமாக வாழப் போகிறார் என்பதை நினைத்து நிர்பயாவின் பெற்றோர் கோபத்தில் உள்ளனர்.

English summary
The juvenile rapist in Nirbhaya case is set to walk free from juvenile remand home by the end of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X