For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபாவில் புயலை கிளப்பிய நிர்பயா ஆவணப்படம்: அமளி, ஒத்திவைப்பு- ராஜ்நாத்சிங் விளக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவையில் இன்று அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதனால், 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் என்பவர் நிர்பயா சம்பவத்தை, "இந்தியாவின் மகள்" என்ற தலைப்பில் ஆவணப் படமாக தயாரித்துள்ளார்.

Nirbhaya documentary case rocks Rajya Sabha; Home Minister issues clarification

இந்த ஆவணப்படத்தில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் சிங், பேசியிருக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சிறையில் இருக்கும் முகேஷ்சிங், "அந்தப் பெண்ணை நான் பலாத்காரம் செய்யவில்லை. பலாத்காரம் நடந்த போது நான் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். பலாத்கார சம்பவங்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகம் பொறுப்பேற்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

பலாத்காரத்தின்போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அவர் போராடியிருக்கக் கூடாது. 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்களாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மிகக் கொடூரமான பலாத்கார சம்பவம் பற்றி குற்றவாளி தெரிவித்துள்ள இந்த கருத்துகள் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி, தனியார் தொலைக்காட்சியில் பேசியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபாவில், ஜெயா பச்சன் உள்ளிட்ட பெண் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் இருக்கையையும் முற்றுகையிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் உத்தரவிட்டார். இதனையடுத்து 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நிர்பயா பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளி முகேஷ் சிங் பேட்டியுடன் ஆவணப் படம் வரும் 8 ஆம் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு

திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி, தனியார் தொலைக்காட்சியில் பேசியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் துவங்கியபோது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். அப்போது, 'நிர்பயா வழக்கு குற்றவாளியிடம் பேட்டி எடுத்த விவகாரத்தில் விதிமீறல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

English summary
A foreign documentary on Nirbhaya case rocked the Parliament on Wednesday urging the Home Minister Rajnath Singh to make a statement in the Upper House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X