For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன்.

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் தாய்வழி தாத்தா தமிழகத்தின் முசிறியை சேர்ந்தவர். திருச்சியில் 18-8-1959ல் பிறந்தார் நிர்மலா சீதாராமன்.

இவரது தந்தை சீதாராமன் திருச்சி ரயில்வேயில் பணியாற்றினார். சேலம், சென்னை ஆகிய இடங்களுக்கு நிர்மலாவின் தந்தை சீதாராமன் இடம் மாறியதால் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்தது.

திருச்சியில் கல்லூரி படிப்பு

திருச்சியில் கல்லூரி படிப்பு

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர் நிர்மலா சீதாராமன். பின்னர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை தொடர்ந்தார்.

டெல்லியில்...

டெல்லியில்...

ஆந்திராவை சேர்ந்த டாக்டர் பிரகலாத் பிரபாகர் என்பவரை மணந்து ஹைதராபாத்துக்கு சென்றார். அதன்பின் டெல்லியில் நிர்மலா சீதாராமன் குடும்பம் குடியேறியது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இணை அமைச்சர்

இணை அமைச்சர்

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார் நிர்மலா சீதாராமன். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சரானார். 2016-ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் தமிழ் பெண்மணி

முதல் தமிழ் பெண்மணி

தற்போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ள முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன். இந்திரா காந்தி பிரதமர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் வைத்திருந்தார். ஆனால் முதல் முறையாக பாதுகாப்புத் துறை ஏற்றுள்ள பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nirmala Sitaraman will be the new Defence Minister of India, the second woman to be in-charge of the portfolio after Indira Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X