For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துர்க்கண்ணாவின் தூக்கத்தை தொலைத்த நித்தியானந்தா…: அதிகாலையில் ஆண்மை பரிசோதனை நடக்கிறது?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவர் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காவிட்டால், க‌ட்டாயப்படுத்தி ஆண்மை பரிசோதனை செய்வோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் நித்யானந்தாவுக்கு, கடந்த 8-ஆம் தேதி ஆண்மை பரிசோதனை நடைபெற்றது.

நித்தியானந்தா ஒத்துழைக்கவில்லை

நித்தியானந்தா ஒத்துழைக்கவில்லை

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை மற்றும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

மருத்துவர்கள் தவிப்பு

மருத்துவர்கள் தவிப்பு

இதனால் ஆண்மை பரிசோதனைக்கான சான்றிதழ் களை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யமுடியாமல் தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தவித்து வருகிறார்.

மீண்டும் ஆண்மை பரிசோதனை

மீண்டும் ஆண்மை பரிசோதனை

இதனிடையே சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்கு பிறகு, இன்னும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை முடிவுகளை அறிவிப்போம் என மருத்துவர் துர்க்கண்ணா சிஐடி போலீஸாரிடம் தெரிவித்தார்.

சிஐடி போலீசார் ஆலோசனை

சிஐடி போலீசார் ஆலோசனை

இதனைத் தொடர்ந்து நித்யானந்தா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பெங்களூரில் கர்நாடக சிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

மாத்திரை சாப்பிட்ட நித்தி

மாத்திரை சாப்பிட்ட நித்தி

கடந்த முறை நடைபெற்ற ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முறையாக ஒத்துழைக்கவில்லை.ப‌ரிசோதனை நடைபெறுவதற்கு முன்பாக அவர் மருந்து உட்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

மிமிக்ரி செய்து ஏமாற்றம்

மிமிக்ரி செய்து ஏமாற்றம்

மேலும் குரல் பரிசோதனையின் போது மாத்திரையை தொண்டையில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் இந்த சோதனை முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே மீண்டும் நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று சிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

கைது செய்ய திட்டம்

கைது செய்ய திட்டம்

இதற்கு முன்னதாக ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி, முறையான அனுமதி பெற முடிவு செய்துள்ளோம். விசாரணைக் காலகட்டத்தில் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க‌க்கூடாது என்ற தடை ஆணையையும் பெற திட்டமிட்டுள்ளோம். ஆதலால் அவர் தமிழகத்திற்கு தப்பி செல்ல முடியாது. மீறினால் கைது செய்வோம்.

காவல்துறைக்கு உரிமை

காவல்துறைக்கு உரிமை

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்காவிடில், அவரை கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வோம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 53-ம் பிரிவிலும், கர்நாடக குற்ற நடைமுறை வரைவு விதிமுறை யின் 21-ம் பிரிவின் கீழும் இதற்கு காவல்துறைக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

அதிகாலையில் ஆண்மை பரிசோதனை

அதிகாலையில் ஆண்மை பரிசோதனை

அப்போது ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யானந்தாவிடம் சில முக்கிய சோதனைகளை வலுக்கட்டாயமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

English summary
It looks like it’s not going to be easy for self-styled godman Nithyananda to steer clear of problems. After doctors conducted tests on him to certify his potency on September 8, based on a Supreme Court order against his alleged sexual assault on a woman devotee in his ashram in 2012, his potency is still in doubt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X