For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸ் அதிரடி.. 2 பெண் நிர்வாகிகள் கைது.. 6 பிரிவுகளில் வழக்கு!

நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

காந்திநகர்: நித்யானந்தாவின் கெடுபிடி ஆசிரமத்துக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து, மட நிர்வாகிகள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். தன் மகள்களை சந்திக்க விடாமல் தடுத்ததாக இளம்பெண்களின் தந்தையார் புகார் தெரிவித்ததன், அடிப்படையில் அகமதாபாத் ஆசிரமத்தில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார். அதில், அவர் சொல்லி உள்ளதாவது:

nithyanandha ashrams two women administrator arrested by gujarat police

"கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய மகள்களைச் சேர்த்தோம். ஆனால், அவர்கள் பெங்களூரிலிருந்து அகமதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனால் அகமதாபாத் ஆசிரமத்துக்கு போலீசுடன் சென்றோம். ஆனால் அங்குள்ள ஆசிரம ஊழியர்களான பிராணப்பிரியா, பிரியா தத்துவா ஆகியோர் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் பிறகு சென்று ஒரு மகளை மீட்டோம். ஆனால் மூத்த மகள்கள் லோகமுத்ரா, மற்றும் நந்திதா, இரண்டு பேருமே வரமறுத்துவிட்டார்கள். அதனால் அவர்களை மீட்டுத்தருமாறு அந்த தம்பதி மனுவில் கூறியுள்ளார்.

என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ

தன் குழந்தைகளை கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் ஸ்டேஷனிலும் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்யானந்தா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைதாகி உள்ளனர். பிராணப்பிரியா, பிரியா தத்துவா என்ற இவர்கள் 2 பேர்தான், பெற்ற மகள்களை பார்க்க விடாமலும், ஆசிரமத்துக்குள் நுழைய விடாமலும் கெடுபிடி செய்தவர்கள்.. ஜனார்த்தன சர்மாவின் ஹேபியஸ் கார்பஸ் மனுவினை தொடர்ந்து, இவர்களை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதனடிப்படையிலேயே ஆசிரமத்திற்குள் நுழைந்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

English summary
nithyanandha ahmedabad ashrams two women administrator arrested by police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X