For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாமே.. மத்திய அரசுக்கு நிதி ஆயோக் 'பகீர்' பரிந்துரை

கிராமம் மற்றும் நகரங்களில் நாடு முழுவதும் உள்ள, போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில்

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு திடுக்கிடும் பரிந்துரையைச் செய்துள்ளது.

 Niti Aayog suggested Non-performing govt schools should be handed over to privates

மேலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் எனவும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் கூறியுள்ளது. அதே போல அந்த வருடங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Niti Aayog recommended that all underperforming government schools should be handed over to private players under the public private partnership (PPP) model.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X