For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் பீகார் புறக்கணிக்கப்படுவதாக நிதிஷ் குற்றச்சாட்டு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாட்னா: ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் பீகார் மாநிலம் புறக்கணிக்கப்படுவதாக அம் மாநில முதல்வர் நிதிஷ்குார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதற்கட்டமாக மேம்படுத்தப்படவுள்ள 20 நகரங்களின் பட்டியலில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு நகரம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், இதன் மூலம் பிராந்திய சமநிலையை ஏற்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Nitish Kumar said, Bihar ignored in the list of Smart Cities project

இதுகுறித்து பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த வெண்டிய நகரங்களின் பட்டியலை தேர்வு செய்து அனுப்புமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி, பீகார் மாநிலத்தின் சில நகரங்களைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனினும், அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட முதற்கட்ட பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 20 நகரங்களில் ஒன்றுகூட பீகார் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படவில்லை" என்றார்.

English summary
Bihar Chief Minister Nitish Kumar on Saturday slammed the Centre for not including any city from Bihar in the list of Smart Cities, saying it had “ignored” Bihar and upset the regional balance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X