For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட பார்ரா.. கைலாசா வெப்சைட்டை தினமும் 8 லட்சம் பேர் பார்க்கிறார்களாம்.. சர்வரே டவுன்..நித்தி சலிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியானந்தா செய்யும் சேட்டைகள்... சிறைக்குள் அடைவது எப்போது?

    டெல்லி: கைலாசா தனி நாடு வெப்சைட்டை ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பார்க்கின்றனர். இதனால் சர்வரே முடங்கி போய் வேறு சர்வரை மாற்ற வேண்டிய நிலை உள்ளதாக நித்யானந்தா புளங்காங்கிதப்பட்டார்.

    பாலியல் குற்றங்களால் திணறடித்த நித்யானந்தா, தற்போது குழந்தை கடத்தல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இவரிடம் விசாரணை நடத்தலாம் என்றால் அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

    தான் இருக்கும் இடத்தை கூறாமல் நித்யானந்தா புதிய புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஒரு முறை தான் இமயமலையில் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    பாஸ்போர்ட்

    பாஸ்போர்ட்

    இதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் கைலாசா குறித்து இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான கட்சிக் கொடி, பாஸ்போர்ட் என உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    பெயர் மாற்றம்

    பெயர் மாற்றம்

    இந்த நிலையில் அவரோ முன்பு வெளியிட்டிருந்த வீடியோவில் கைலாசாவா எங்கிருக்கிறது என கேட்டிருந்தார். நேற்று காலை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தனது சீடர்களை தொடர்பு கொண்டு கைலாசாவின் பெயரை ஸ்ரீகைலாஷா என மாற்றியுள்ளதாக தெரிவித்தாராம்.

    குடியேற விருப்பம்

    குடியேற விருப்பம்

    தனிநாடு அறிவிப்பை வரவேற்று ஏராளமானோர் பாராட்டி வருவதாகவும் அந்த நாட்டில் குடிப்பெயர 12 லட்சம் பேர் இணையத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தினமும் ஒரு லட்சம் பேர் என கைலாஷாவில் குடியேற விண்ணப்பித்து வருகின்றனர்.

    வரவேற்பு

    வரவேற்பு

    இதை எப்படி அமல்படுத்துவது என்பது தொடர்பாக கார்த்திகை தீபமான இன்று அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கைலாஷாவுக்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    அவகாசம்

    அவகாசம்

    மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறுகையில் பதில் அளிக்க கால அவகாசம் கொடுங்கள். தங்கள் நாடுகளில் கைலாஷா அமைக்க ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து நிலங்களை கூட தர முன்வந்துள்ளனர்.

    சர்வர் முடக்கம்

    சர்வர் முடக்கம்

    சில நாட்டு அரசுகளும் எங்களை தொடர்பு கொண்டு கைலாசா அமைக்க அணுகியுள்ளனர். அவர்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. மிக விரைவில் கைலாசாவுக்கு இடம் அமையும். அது பற்றி அறிவிப்பேன். கைலாசா தனி நாடு வலைப்பக்கத்தை ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பார்ப்பதால் சர்வரே முடங்கி போய்விட்டது என சலித்து கொண்டார்.

    English summary
    Nityananda says that daily 8 lakh people are watching his Kailasa website and 12 lakh are applying for citizenship in that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X