For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கொச்சி: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு இருக்கும் பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் பிராங்கோ பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.

No bail for Catholic bishop Franco: Kerala High Court

அவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த வாரம்தான் இவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாள் முன் கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் ஜாமின் கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவர் ஜாமின் மீதான மனுவில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீதான வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

English summary
Kerala nun rape case: On demand of the government seeking more time, the Kerala High Court has set Thursday (27.09.2018) to consider the bail application of Bishop Franco Mulakkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X