For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதத்தை காரணம்காட்டி குழந்தைக்கு தாய்ப்பால் தர எதிர்ப்பு தெரிவித்த கேரளாவின் அபூபக்கர் கைது!

மதத்தை காரணமாக கூறி குழந்தைக்கு தாய்ப்பால் தர எதிர்ப்பு தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த அபூபக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மதத்தை காரணம்காட்டி குழந்தைக்கு தாய்ப்பால் தர எதிர்ப்பு தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த அபூபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த அபூபக்கரின் மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

No breast milk on religious grounds- Parents booked by Kerala police

ஆனால் அபூபக்கரோ தம்முடைய மதத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதியில்லை; மெக்காவில் இருந்து கொண்டுவரப்படும் தேனும் புனித நீரும் போதுமானது என மதபோதகர்கள் கூறியிருப்பதாக வாதிட்டிருக்கிறார். மருத்துவர்களோ தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் அபூபக்கர் விடாப்பிடியாக இருந்ததுடன் உடனே மருத்துவமனையில் இருந்து மனைவியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். இது தொடர்பாக கோழிக்கோடு போலீசில் மருத்துவர்கள் புகார் செய்தனர்.

இதனையடுத்து அபூபக்கர், அவரது மனைவி மீது கோழிக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது அபூபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
Kerala Police arrested Abu Bakr, the father of the new born baby who denied breast milk for 24 hours and the priest who advised him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X