For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மத்திய பாஜக அரசு எளிதாக வென்றுவிட்டது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 451 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதிமுகவும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

No confidence motion against NDA government - live updates

Newest First Oldest First
11:17 PM, 20 Jul

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவிப்பு

மொத்தம் 451 வாக்குகள் பதிவாகின

11:11 PM, 20 Jul

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு தப்பியது

குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் மின்னணு முறையில் வாக்கு பதிவு நடந்தது

அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள், எதிராக 126 வாக்குகள்

11:06 PM, 20 Jul

குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது டிவிஷன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது

10:59 PM, 20 Jul

நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார் சபாநாயகர்
10:58 PM, 20 Jul

பிரதமர் உரையை பார்த்தபோது பிளாக் பஸ்டர் படம் பார்த்ததை போல இருந்தது-சீனிவாஸ் கேசினேனி

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த தெலுங்கு தேசம் எம்.பி. சீனிவாஸ் கேசினேனி கிண்டல்

உலகின் சிறந்த நடிகருக்கான திறமை மோடியிடம் உள்ளது- சீனிவாஸ் கேசினேனி

10:55 PM, 20 Jul

மோடி உரை முடிந்ததையடுத்து சில நிமிடங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது
10:51 PM, 20 Jul

சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த பிரதமர் மோடி உரை நிறைவடைந்தது
10:38 PM, 20 Jul

ஒரு போன் கால் செய்தே லோன் வழங்க கூறிய நடைமுறை காங். ஆட்சியில் இருந்தது

காங்கிரஸ் ஆட்சியில் வராக்கடன் உச்சத்தை தொட்டது-மோடி

10:35 PM, 20 Jul

2009-14 வரை வங்கியிலிருந்து பல கோடிகள் காங்கிரசால் கொள்ளையடிக்கப்பட்டன-மோடி

வங்கித்துறை சீர்திருத்தத்தின் காரணமாக இப்போது வளர்ச்சி கூடியுள்ளது

பல சட்டங்கள் காரணமாக வரி வருவாயை அதிகரித்துள்ளோம்-மோடி

வங்கி வளர்ச்சிக்காக ரூ.2.10 லட்சம் கோடி வழங்கியுள்ளோம்

10:27 PM, 20 Jul

மோடியின் உரையில் திருப்தியடையாத தெலுங்கு தேசம் எம்பிக்கள் கோஷம்

'வீ வான்ட் ஜஸ்டிஸ்' என்று தெலுங்கு தேசம் எம்பிக்கள் தொடர் கோஷம்

கோஷத்திற்கு நடுவே மோடி பதில் உரை

10:23 PM, 20 Jul

ஆந்திரா-தெலுங்கானா பிரிப்பு விவகாரத்திற்கு மோடி பதில்

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன

ஆந்திர மக்களின் விருப்பங்களை மதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது-மோடி தெலுங்கு எங்கள் தாய் போன்றது- மோடி

10:22 PM, 20 Jul

ஆந்திரா, தெலுங்கானா இரு மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்- மோடி

சிறப்பு அந்தஸ்து மூலமாக ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டு வருகிது

ஆந்திரா-தெலுங்கானா பிரிவின் நன்மையை விரைவில் நீங்கள் அறிவீர்கள்

10:14 PM, 20 Jul

ராகுல் காந்தி கேள்விகளுக்கு மோடி அடுத்தடுத்து பதிலடி

கண்ணடித்தது, கண் பார்த்து பேசக்கூறியது, ரபேல் என ஒவ்வொன்றுக்கும் மோடி பதிலடி

10:12 PM, 20 Jul

நான் ஒரு ஏழை என்பதால் ராகுல் காந்தி கண்ணை பார்த்து பேசும் தைரியம் இல்லை- மோடி

காங்கிரஸ் கண்களை பார்த்து பேசியவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியும்

நாங்கள் நாட்டின் பணியாளர்கள், நீங்கள் (காங்கிரஸ்) நாட்டை விற்பவர்கள்-மோடி பேச்சு

ராகுலின் கண்கள் என்ன செய்யும் என்பதை இந்த நாடே இன்று பார்த்துவிட்டது-மோடி

ராகுல் காந்தி தனது கண்ணை பார்த்து பேச கூறியதற்கு மோடி பதிலடி

10:10 PM, 20 Jul

ராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது - மோடி
10:02 PM, 20 Jul

வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து நாட்டை தேர்தலுக்கு தள்ளியது காங்.- மோடி

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் அடைவது காங். வழக்கம்

பல முறை காங்கிரஸ் நாட்டை நிலையற்ற தன்மைக்கு தள்ளியுள்ளது

ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, முலாயம்சிங் போன்றோர் காங்கிரசால் அவமானத்திற்குள்ளாகினர்

10:00 PM, 20 Jul

டோக்லாம் விவகாரத்தில் சீனாவை நம்பும் எதிர்க்கட்சிகள் இந்தியாவை நம்பவில்லை

இந்த நாடு எதிர்க்கட்சிகளை மன்னிக்காது- மோடி கோபம்

10:00 PM, 20 Jul

நமது ராணுவ வீரர்கள் பெற்ற வெற்றியை கூட எதிர்க்கட்சிகள் ஏற்க மனமில்லை

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மீதும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பினர்

ராணுவ தளபதியை கூட எதிர்க்கட்சிகள் தவறாக பேசியுள்ளனர்- மோடி ஆவேசம்

நீங்கள் என்னை என்னவேண்டுமானாலும் அவமானகரமாக பேசிக்கொள்ளுங்கள்

இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்

இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்- மோடி

9:53 PM, 20 Jul

காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம், ஆர்பிஐ, நீதித்துறை எதன் மீதும் நம்பிக்கையில்லை

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம்-மோடி

2024ம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்-மோடி

9:51 PM, 20 Jul

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார் மோடி

தவறான வழிக்கு செல்லவிருந்த ரூ.90 ஆயிரம் கோடி அரசு பணத்தை தடுத்துள்ளோம்-மோடி

4500 பினாமி சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது

கருப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும்

இன்னும் கூட அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையாம்- மோடி கிண்டல்

காங்கிரசுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை, எனவேதான் அரசையும் நம்பவில்லை-மோடி

9:47 PM, 20 Jul

அரசு ஏழைகளுக்காக உழைத்து வருகிறது-மோடி பேச்சு

13 கோடி இளைஞர்களுக்கு தொழில் துவங்க கடன் வழங்கியுள்ளோம்

தெலுங்கு தேச உறுப்பினர்களின் அமளிக்கு நடுவே மோடி உரை

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைகளுக்கும் சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது

விவசாயிகள் வருமானத்தை 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம்- மோடி

9:42 PM, 20 Jul

எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை குழப்புகிறார்கள்--மோடி

15 கோடி மக்களுக்கு மண் பரிசோதனை அட்டை தரப்பட்டுள்ளது

கடந்த 2 வருடங்களில் 5 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் கொண்டுவரப்பட்டுள்ளனர்

யூரியா பற்றாக்குறை இப்போது இந்தியாவில் கிடையாது- மோடி

அரசின் சாதனைகளை பட்டியலிடுகிறார் பிரதமர் மோடி

9:37 PM, 20 Jul

சிலர் எனது இருக்கைக்கே வந்து எழுந்திரியுங்கள் என்கிறார்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பே முடியாத உங்களுக்கு ஏன் அவசரம்

ராகுல் காந்திக்கு மறைமுகமாக மோடி பதிலடி

மக்களின் ஆதரவுடன்தான் நாங்கள் இங்கே அமர்ந்துள்ளோம்- மோடி பேச்சு

9:34 PM, 20 Jul

எதிர்க்கட்சிகளுக்கு அதிகார பசி என்ற மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மோடியை பேச விடாமல் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

9:29 PM, 20 Jul

மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அகங்காரம்தான் எதிர்க்கட்சிகளிடம் தெரிகிறது

என்னை பிரதமர் பதவியில் அமர வைத்தது 125 கோடி மக்கள்-மோடி பேச்சு

அதிகாரப் பசியின் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை உறுப்பினர்கள் தோற்கடிக்க வேண்டும்- மோடி பேச்சு

9:26 PM, 20 Jul

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் இயலாமையை எடுத்து காட்டிவிட்டது-மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களை நம்பிக்கையில்லா தீர்மானம் காட்டி கொடுத்துவிட்டது-மோடி

9:19 PM, 20 Jul

லோக்சபாவில் பிரதமர் உரை ஆரம்பம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் பதில்

9:07 PM, 20 Jul

லோக்சபாவிற்கு மீண்டும் வந்தார் பிரதமர் மோடி

இன்னும் சில நிமிடங்களில் உரையாற்ற வாய்ப்பு

8:23 PM, 20 Jul

பல கட்சி உறுப்பினர்களும் பேசிக் கொண்டிருப்பதால் பிரதமர் பதிலுரையில் தாமதம்

இரவு 8.30 மணிக்கு மேலும் தொடருகிறது லோக்சபா அலுவல்

7:18 PM, 20 Jul

இரவு 8 மணிவரை லோக்சபா அலுவல் நேரம் அதிகரிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்வதால் சபாநாயகர் அறிவிப்பு

READ MORE

English summary
All BJP MPs have been asked to have lunches and dinners together on today to ensure that all are present for the no-trust vote, top party leaders said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X