For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக வைத்திருக்கும் அல்டிமேட் திட்டம்!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை லோக் சபாவில் சீக்கிரம் அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணங்கள் சில சொல்லப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது என்ன?- வீடியோ

    டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை லோக் சபாவில் சீக்கிரம் அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணங்கள் சில சொல்லப்படுகிறது. முக்கியமாக அவையில் 350 பேர் பாஜகவிற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம்தான் தற்போது இந்தியாவில் ஹாட் டாப்பிக். பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சில முக்கிய கட்சிகள் தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் 50க்கும் அதிகமான கட்சிகள் பாஜகவிற்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கியமான காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. பாஜக சில முக்கியமான மசோதாக்களை, அவர்களுக்கு பிடித்த சில மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தினமும் பிரச்சனை நடக்கும் என்று முதல் வாரமே, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி அளிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    பேச போகிறார்

    பேச போகிறார்

    இந்த நிலையில் மிக முக்கியமாக பாஜக பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி நாளை நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பிற்கு முன், பிரதமர் மோடி பேச இருக்கிறார். நம்பிக்கை இல்லை தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன் பிரதமர் உருக்கமான உரை ஒன்றை பேச திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது பாஜகவிற்கு பெரிய நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

    பிளான் 350

    பிளான் 350

    மேலும் இன்று மாலைதான் பாஜக அதிமுகவிடம் ஆதரவு கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி அதிமுகவும் பாஜகவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவின் பலம் 350 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவின் பலம் 313 ஆக இருக்கிறது.

    இதனால் என்ன பயன்

    இதனால் என்ன பயன்

    இந்த பிளான் 350 மூலம் பாஜவிற்கு நிறைய பலன் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மத்தியில், மீண்டும் தாங்கள்தான் பெரிய கட்சி என்று நிரூபிக்க இந்த வாக்கெடுப்பு உதவும். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால், பாஜகவை வீழ்த்திவிட முடியும் என்று நினைப்பதை முறியடிக்கவும் பாஜகவிற்கு இந்த பிளான் 350 உதவும் என்று கூறப்படுகிறது.

    English summary
    The BJP faces a crucial test on Friday as Lok Sabha takes up th no-confidence motion. The trust vote was brought by the TDP and opposition parties, with Speaker Sumitra Mahajan admitting the notice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X