For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக டிரெண்டில் ராகுல் காந்தி.. கூகுளில் வைரலான ஜும்லா.. ஒரே பேச்சில் ஓஹோன்னு வைரல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தனது உரைக்கு பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய போது உரை மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது. இது உலக அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

    ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார். இதில் பல விஷயங்கள் வைரலாகி உள்ளது.

    டிரெண்டு பாஸ்

    டிரெண்டு பாஸ்

    இந்த நிலையில் ராகுலின் சிறப்பான பேச்சால் எல்லோரும் அவரை குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இதனால் ராகுல் காந்தி என்ற வார்த்தை இணையத்தில் வைரல். உலக அளவில் ராகுல் காந்தி டிரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்து பின் மீண்டும் மூன்றாம் இடம் பிடித்தார்.

    பாராட்டு

    ராகுலின் பாராட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர், ராகுல் காந்தி இந்த நிகழ்வையே தனதாக்கி கொண்டார் என்று பாராட்டி இருக்கிறார்.

    ஜும்லா என்றால் என்ன

    ஜும்லா என்றால் என்ன

    இந்த நிலையில் ராகுல் தன்னுடைய உரையில், ஜும்லா என்ற வார்த்தையை குறிப்பிட்டார். பாஜக நலத்திட்டங்கள் என்று நிறைய ஜும்லா செய்திருப்பதாக கிண்டல் செய்தார். இதனால் இந்தியாவில் கர்நாடகாவில், பெங்களூரிலும் ஜும்லா என்றால் என்ன என்று அதிக பேர் தேடி இருக்கிறார்கள். அவர் பேசிய சில நிமிடத்தில் கூகுளில் பலர் இதை தேடி இருக்கிறார்கள்.

    அர்த்தம்

    அர்த்தம்

    இந்த வார்த்தையை பொதுவாக காங்கிரஸ் கட்சியினர், பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளை கிண்டல் செய்ய பயன்படுத்துவார்கள். பொய்யான வாக்குறுதி, பொய், ஏமாற்று வேலை ஆகியவற்றை இப்படி குறிப்பிடுவார்கள். அதிகமாக, ப.சிதம்பரம், குஷ்பு ஆகியோர் இதை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். சுப்பிரமணியன் சுவாமியும் இதை சில சமயம் பயன்படுத்தி இருக்கிறார்.

    English summary
    No-confidence motion: Rahul Gandhi gets into world trend after his speech on Jumla.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X