For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியால் என் கண்ணை கூட பார்க்க முடியவில்லை.. லோக் சபாவில் விளாசிய ராகுல் காந்தி

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேச்சின் மூலம் அவையையே அதிர வைத்து இருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் வ

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ

    டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேச்சின் மூலம் அவையையே அதிர வைத்து இருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார்.

    ராகுல் பேச்சின் போது பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுலை பேசவிடாமல் தடுக்க பார்த்தனர். அவர் பேசுவது வெளியே கேட்க கூடாது என்று கத்தி கூச்சலிட்டனர்.

    பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.

    நிர்மலா சீதாராமன் கண்டனம்

    நிர்மலா சீதாராமன் கண்டனம்

    இதில் ராகுல் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி, அமித் ஷாவின் மகன் ஆகியோர் குறித்து பேசினார். நிர்மலா சீதாராமன் பொய் சொல்வதாக ராகுல் ஆவேசமாக பேசினார். இதற்கு நிர்மலா சீதாராமன் எழுந்து கோபமாக கத்தினார். நிர்மலாவின் குறுக்கீட்டால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிருப்திக்கு உள்ளனார். பின் அமருமாறு நிர்மலா சீதாராமனுக்கு சுமித்ரா மகாஜன் உத்தரவு பிறப்பித்தார்.

    15 லட்சம் எங்கே

    15 லட்சம் எங்கே

    அதன்பின் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு ராகுல் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் கூறிய ரூ.15 லட்சம் எங்கே? என்று ராகுல் காந்தி ஆவேச கேள்வி எழுப்பினார். அதேபோல் அமித்ஷா மகன் ஜெய்ஷா குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். அது தொடர்பான ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    புறக்கணித்தார்

    புறக்கணித்தார்

    விவசாயிகளையும், சிறு தொழில் முனைவோர்களையும் மோடி புறக்கணிக்கிறார்.7 வருடங்களில் மிக மோசமான நிலையில் வேலைவாய்ப்பு உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. இது குறித்து பேசும்போதெல்லாம் பாஜகவினர் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள்.

    மோடிக்கு எதிராக பேசினார்

    மோடிக்கு எதிராக பேசினார்

    மோடியை நேருக்கு நேர் பார்த்து ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு வைத்தார். மோடியின் மார்க்கெட்டிங்கிற்காக அரசு பணம் செலவிடப்படுகிறது. மோடியால் இப்போது என் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. பொய் மூட்டைகளால் மோடியால் என்னை பார்க்க முடியவில்லை.பெரும் வியாபாரிகளுக்கு ஆதரவான அரசு மோடி அரசு.பெரும் முதலாளிகளுடன் மோடிக்குத் தொடர்பு.

    மோடி ரியாக்சன்

    இந்த பேச்சு முழுக்க மோடி அமைதியாக இருந்தார். சலனமில்லாமல் ராகுல் பேச்சைக் கவனித்தார் மோடி. முதலில் ராகுலின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தார். அதன்பின் ராகுல் மோடியை கடுமையாக சாடிய பின், ராகுல் காந்தி பேச்சுக்கு புன்னகை மூலம் மோடி பதில் அளித்தார். சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தார்.

    மறியல்

    மறியல்

    ராகுல் காந்தியின் ஆவேச பேச்சால் பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக எம்.பி.எக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.பாஜக எம்பிக்கள் அமளியால் லோக்சபா 1.45 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இடைவேளைக்கு பிறகு மீண்டும் ராகுல் காந்தி உரையை தொடருவார் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    No-confidence motion: Rahul Gandhi nailed whole BJP with his extraordinary speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X