For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கையில்லா தீர்மானம்: அவையை புறக்கணித்து வெளியேறியது சிவ சேனா!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்து சிவ சேனா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு.. யார் யார் ஆதரவு?

    டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்து சிவ சேனா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

    பரபரப்பாக இன்று கூடி இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    No-confidence motion: Shiv Sena still uncertain on supporting Modi government

    தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சிவ சேனா நேற்று அறிவித்தது. ஆனால் இரவு அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாஜகவிற்கும் ஆதரவு என்று நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறோம். இன்று காலை, கூட்டத்திற்கு முன்புதான் இது குறித்து முடிவு செய்வோம் என்று சிவ சேனா தெரிவித்தது.

    முன்னாள் நண்பர்களான சிவசேனாவும் பாஜகவும் இடையில் கொஞ்சம் பிரச்சனையில் இருந்தது. இரண்டு கட்சிகளின் உறவில் கொஞ்சம் விரிசல் விழுந்தது.ஆனால் அதை பொருட்படுத்தாமல், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என்று சிவ சேனா நேற்று தெரிவித்தது.

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று உத்தவ் தாக்கரேவுடன் போனில் பேசியதை அடுத்து இப்படி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நேற்று இரவோடு இரவாக சிவ சேனா தன்னுடைய முடிவை மாற்றியுள்ளது. சிவ சேனா கட்சிக்கு லோக் சபாவில் 18 எம்.பிக்களின் பலம் இருக்கிறது.

    இந்த நிலையில் பாஜகவிற்கு ஆதரவும் அளிக்காமல், தெரிவிக்காமல், பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்து சிவ சேனா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது. ஏற்கனவே, பிஜு ஜனதாதளம் இப்படி வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    No-confidence motion: Shiv Sena still uncertain on supporting Modi government. As PM Narendra Modi-led government at the Centre faces no-confidence motion today, the Shiv Sena, after saying they'd support BJP, appear to have backtracked.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X