For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் ஹைகோர்ட் அதிரடி.. ஹர்திக் பட்டேலுக்கு செக்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது!

2015 குஜராத் கலவர வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: 2015 குஜராத் கலவர வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2015ல் குஜராத்தில் பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.

இந்த போராட்டம்தான் தற்போது ஹர்திக் பட்டேலுக்கு பிரச்சனையாக உள்ளது. இதனால் அவர் தற்போது தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

லோக்சபா.. தமிழகத்தில் 948 பேர் போட்டி.. 639 பேர் நிராகரிப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு! லோக்சபா.. தமிழகத்தில் 948 பேர் போட்டி.. 639 பேர் நிராகரிப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

என்ன வழக்கு

என்ன வழக்கு

இந்த போராட்டத்தில் விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் சிலருக்கு மோசமான காயம் ஏற்பட்டது. இதில் ஹர்திக் பட்டேல் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

என்ன தண்டனை

என்ன தண்டனை

இதில் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் 2 பேரும் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று இருக்கிறார்கள். இதற்கு பின்தான் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்த தீர்ப்பிற்கு எதிராகவும் ஹர்திக் பட்டேல் மேல்முறையீடு செய்தார்.

வழக்கு மேல்முறையீடு

வழக்கு மேல்முறையீடு

இதில் அவரின் சிறை தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அவர் குற்றம் செய்தவர்தான் என்று நீதிமன்றம் கூறியது. அதே சமயம் லோக்சபா தேர்தலில் ஹர்திக் பட்டேலுக்கு காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குஜராத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் குற்றம் செய்தவர் என்பது மட்டும் ஹர்திக் பட்டேலுக்கு தடையாக இருந்தது.

இல்லை

இல்லை

இதனால் அதை எதிர்த்து ஹர்திக் பட்டேல் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது, தடை செய்ய முடியாது என்று குஜராத் ஹைகோர்ட் கூறியுள்ளது. இதனால் ஹர்திக் பட்டேல் குற்ற தண்டனை பெற்றவர் என்பதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இவர் இந்த லோக்சபா தேர்தலில் எங்கும் போட்டியிட முடியாது.

English summary
No debut this Time: Hardik Patel Can't Contest in the election as Gujarat HC Refuses to Stay Conviction in riot case .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X