For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை... குலாம்நபி ஆசாத் குமுறல்

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அம்மாநிலத்துக்கு செல்ல குலாம்நபி ஆசாத் முயற்சித்தார். ஆனால் ஶ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு 3 முறை திருப்பி அனுப்பப்பட்டார்.

No Democracy in JK, alleges Ghulam Nabi Azad

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் குலாம்நபி ஆசாத். இதனை ஏற்று குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் துயரத்தில் இருக்கின்றனர். 370-வது பிரிவு நீக்கம், மாநிலத்தையே 2 ஆக பிரித்தது ஆகியவை மக்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 100 அல்லது 200 பேர் மட்டும்தான் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மகிழ்ச்சி தொலைந்துவிட்டது.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் என்பது நடைமுறையில் இல்லை. நான் என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு கடும்போக்கு கொண்ட நிர்வாக அமைப்பை பார்த்தது இல்லை. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வேரறுக்கப்பட்டுவிட்டது.

அம்மாநிலத்தில் கருத்து சுதந்திரம் என்பது நசுக்கப்பட்டிருக்கிறது. மக்களினது போராடுகின்ற உரிமை ஒடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

English summary
Senior Congress leader Ghulam Nabi Azad alleged that there is no democracy in Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X