For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை… எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் தாக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து மர்மம் நீடித்து வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை இன்று டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட இந்த அறிக்கை 5 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. இதில் மறைந்த ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

No evidence to attack Jayalalithaa, AIIMS report

ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா அவரது இல்லத்தில் தாக்கப்பட்டார் என்றும் அதன் பிறகே அவர் நினைவிழந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஓபிஎஸ் அணியினர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
There are no evidence to attack Jayalalithaa at her residence, says AIIMS reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X