For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து கோயிலை இடித்துதான் தாஜ்மகால் கட்டப்பட்டதா? மத்திய அரசு பதில்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தாஜ்மகால் இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.

ஆக்ராவிலுள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால். இந்து கோயில் இருந்த இடத்தில் அதை இடித்துவிட்டு, முகலாய மன்னர் ஷாஜகான், தாஜ்மகாலை கட்டியதாக சமீபகாலமாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்தது.

No evidence to prove Taj Mahal was a Hindu temple: Modi government

இந்நிலையில், ஆக்ராவை சேர்ந்த வக்கீல்கள் குழு ஒன்று, தாஜ்மகால் இந்து கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறி கோர்ட்டில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

லோக்சபாவில் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக வந்த கேள்விக்கு, பதிலளித்துள்ள மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா "தாஜ்மகால் இருந்த இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்தமைக்கான எந்த ஆதாரமும் இல்லை. இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு விவரம் அரசிடம் உள்ளது. ஆனால், இந்த சர்ச்சையால் தாஜ்மகாலில் டூரிசம் பாதிக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.

தாஜ்மகாலுக்கு ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Amid several theories and claims about the 'Taj Mahal', the 17th century Mughal monument, the Centre has now said that there is no solid evidence to prove that the historical 'monument of love' was a Hindu temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X