For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் பயண கட்டண உயர்வு இல்லை.. அதான் போன மாசமே ஏத்தியாச்சே!

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு குறித்து அறிவிக்கப்படவில்லை. காரணம், இவற்றை கடந்த மாதமே ஏற்றி விட்ட காரணத்தால்.

மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் பல்வேறு மாநில எம்.பிக்களின் கடும் அமளிக்கு மத்தியில் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தனது முதல் பட்ஜெட்டை வாசித்தார்.

No fare hike in Railway budget

அதில் புதிய ரயில்கள், புல்லட் ரயில் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. கட்டண உயர்வு மட்டும் இடம் பெறவில்லை.

கடந்த மாதமே ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு அமல்படுத்தி விட்டது. எனவே பட்ஜெட்டில் அதுகுறித்து அறிவிப்பு இல்லை.

கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இது கசப்பு மருந்துதான், ஆனாலும் இதைத் தவிர வேறு வழியில்லை. ரயில்வே நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கட்டண உயர்வுடன் மேலும் பல சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது என்று இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது கெளடா தெரிவித்தார்.

English summary
Since the rail fare was hiked last month itself there was no annoncement on this in today's railway budget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X