For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கிடையாது: நிர்மலா சீதாராமன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்காது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்தியில் புதிய அரசு அமைந்து கடந்த 2ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தன. இதையொட்டி, வர்த்தகம்,தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டி:

No FDI in multi-brand retail, e-commerce: Sitharaman

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் எந்தக் குழப்பமும் இல்லை.

அதேபோல் இ காமர்ஷ் எனப்படும் இணைய தள வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்.

இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை பாஜக தெளிவாகக் கூறியுள்ளது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதுபற்றிக் கூறி, அதன் அடிப்படையிலேயே வெற்றி பெற்றுள்ளோம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

English summary
The government will not allow foreign direct investment (FDI) in multi-brand retail, Commerce and Industry Minister Nirmala Sitharaman said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X