For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை இல்லை.. அசாம் அரசு அதிரடி

அசாம் அரசு கொண்டு வந்துள்ள புதிய மக்கள்தொகை கொள்கையின்படி 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்று அந்த மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

குவாஹாட்டி: அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை வழங்கப்படமாட்டாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் பிஸ்வா சர்மா குவாஹாட்டியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அசாமில் வறுமையை ஒழிக்கவும், குழந்தைகள் இறப்பை தடுக்கவும் புதிய மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

No govt job in Assam for those who have more than 2 children

இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வோருக்கு இனி அரசு வேலை வழங்கப்படாது. இந்த நிபந்தனைக்குட்பட்டு அரசு வேலை பெறும் நபர்கள் தாங்கள் பணி ஓய்வு பெறும் வரை இத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். அதேபோல் குழந்தை திருமணம், அதாவது திருமண வயதுக்கு முன்பே திருமணம் செய்திருந்தாலும் அவர்களுக்கு அரசு வேலை கிடையாது.

இந்த புதிய கொள்கை மூலம் மாநிலத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பல்கலைக்கழக அளவு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

English summary
The Assam government announced a draft population policy which has denial of government jobs to people with more than two children and also those who marry before they attain marriage age.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X