For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் தீங்கு ஒன்று இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

By Siva
Google Oneindia Tamil News

No harm in kids using mobiles: CM Siddaramaiah
பெங்களூர்: குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் தீங்கு ஒன்றும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான சட்டசபை குழு தலைவர் சகுந்தலா ஷெட்டி எம்.எல்.ஏ. அம்மாநில சட்டசபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

பெண்கள் கடத்தப்படுவது மற்றும் கற்பழிப்படும் சம்பவங்களுக்கு செல்போன் காரணமாக உள்ளது. கலந்துரையாடலில் நாங்கள் இதை கண்டறிந்தோம். எனவே, பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் அந்த அறிக்கையை பார்க்கவில்லை. அதனால் அது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செல்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் குணத்தை பாதிக்காது என்றார்.

ஆனால் இது குறித்து மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறுகையில், செல்போன்களால் தீமை ஏற்படும். அதனால் பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

English summary
Karnataka CM Siddaramaiah said that there is no harm in children using cell phones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X