For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தாலி நிலநடுக்கத்தில் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை : சுஷ்மா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இத்தாலி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய இத்தாலியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

ரோமின் வடகிழக்கு பகுதியில் சுமார் 100 கி.மீ தொலைவில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இத்தாலி நகரங்களின் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

 No Indian casualty in Italy earthquake: Sushma Swaraj

அக்குமோலி நகர சுற்று பகுதியை மையப்புள்ளியாக கொண்டு நிகழ்ந்த இந்த நிலநடுக்க விபத்தில் சிக்கி சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
There has been no Indian casualty in the magnitude 6.2 earthquake that rocked Italy on Wednesday, external affairs minister Sushma Swaraj said citing the Indian embassy in Rome.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X