For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்திய சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு

By Mathi
Google Oneindia Tamil News

No Indian visa for Sri Lanka war documentary maker
டெல்லி: இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நவம்பர் 7ந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ந் தேதி இந்தியா வர கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார். ஆனால் கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை இலங்கை போர்க்குற்றங்களை வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது சேனல் 4 தொலைக்காட்சி.

தற்போது அதன் இயக்குநரான கல்லம் மேக்ரேவுக்கு இந்தியா வர விசா மறுக்கப்பட்டிருப்பது தமிழ் இயக்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
India has denied a visa to Callum Macrae, the director of a documentary that exposed war crimes in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X