For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி முதல் மத்திய அரசின் குரூப் பி,சி,டி பணியிடங்களுக்கு “நோ இன்டர்வியூ” - பிரதமர் மோடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குரூப் பி, சி, டி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு வருகின்ற ஜனவரி முதல் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

No interviews for Group B, C and D posts in Central government says Modi

இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக்காக சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் குரூப் பி, சி, டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தாமலேயே ஆட்களை நியமிக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் மத்தியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்து பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மாதந்தோறும் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

"இந்த நேர்முகத் தேர்வு முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இருப்ப தால் இடைத்தரகர்கள் ஏழை மக்களை கொள்ளையடித்து வருகின்றனர். சிறிய பணியிடங்களுக்கு எல்லாம் இதைப்போன்ற நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா? என நான் சிந்தித்துப் பார்த்தேன். ஓரிரு நிமிடங்கள் நடத்தப்படும் இதுபோன்ற நேர்முகத் தேர்வுகளில் உளவியல் நிபுணர்கள் யாரும் கலந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டதே கிடையாது. எனவே, 1.1.2016 முதல் மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

English summary
In a welcome move for future government job aspirants, Prime Minister Narendra Modi on Sunday announced that the government has decided to do away with interviews for low rank jobs from January 1, 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X