For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக்டவுன்.. பசி கொடுமை.. பிச்சை எடுத்து கூட குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை.. தாயின் குமுறல்

Google Oneindia Tamil News

ராஞ்சி: ராஞ்சியில் லாக்டவுனால் வேலையில்லாததால் அங்கு பசிக் கொடுமையால் அடுத்தடுத்து பலியாகும் சோகம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு இந்தியாவில் 21 நாட்களாக லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த நிலையில் யாரும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என உத்தரவு உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும் தொழில் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துவிட்டன. எனினும் தினக் கூலி தொழிலாளர்களின் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டதால் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

நீங்கதான் தெய்வம்.. துப்புரவு பணியாளர்களின் பாதங்களை கழுவி அத்தியாவசியப் பொருட்களை வழங்கல் நீங்கதான் தெய்வம்.. துப்புரவு பணியாளர்களின் பாதங்களை கழுவி அத்தியாவசியப் பொருட்களை வழங்கல்

கொடுமை

கொடுமை

இந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களைவிட பசியால் வாடும் கொடுமையே இந்தியாவில் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தினக் கூலியை நம்பியுள்ள குடும்பங்கள் தற்போது வேலை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரவதி தேவி (32). இவர் கடந்த 3 நாட்களாக எதையும் சாப்பிடவில்லை. அவரது குடும்பத்தில் உள்ள 8 பேர் லாக்டவுன் அறிவித்த நாள் முதல் பட்டினியாகவே இருக்கிறார்கள்.

பிச்சை எடுக்கக் கூட வழியில்லை

பிச்சை எடுக்கக் கூட வழியில்லை

இது அரசு கவனிக்காவிட்டால் பசியால் இறந்துவிடுவோமோ என பயம் இருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் லாக்டவுனால் என்னால் வெளியே சென்று பிச்சைக் கூட எடுத்து என் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். இவர் கர்கோர்மா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் செங்கல் சூளையில் தினக்கூலி தொழிலாளியாக உள்ளார்.

பசியால் வாடும் கொடுமை

பசியால் வாடும் கொடுமை

வீட்டிலிருந்த உணவு பொருட்களும் தீர்ந்துவிட்டன. வீட்டில் 3 பேருக்கு ரேஷன் கார்டுகள் இருந்தும் மத்திய மாநில அரசுகள் உணவு பொருட்கள் கிடைக்க எந்த உதவியையும் செய்யவில்லை. இதே போல் அவரது அக்கம்பக்கத்தினரும் பசியால் வாடுகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் லாக்டவுன் அறிவித்த நாள் முதல் இன்று வரை 3 பேர் பலியாகிவிட்டனர். காரணம் இவர்கள் பசியால் வாடியதாக கூறப்படுகிறது.

மளிகை பொருட்கள்

மளிகை பொருட்கள்

கர்வா மாவட்டம், பந்தாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சோமாரியா தேவி. 72 வயதாகும் இவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. வருமானத்திற்கு வழியுமில்லை. அரசு திட்டங்களின் கீழ் பதிவும் செய்யவில்லை. இவர்களது கிராமத்திற்கு அருகில் உள்ள உறவினர் ஒருவர் இவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கித் தந்தார்.

கூலித் தொழிலாளி

கூலித் தொழிலாளி

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் அவர்கள் தனியே இருந்தனர். இந்த நிலையில் 9 நாட்கள் கழித்து சோமாரியா தேவி இறந்துவிட்டார். 50 வட்டங்களில் 15 வட்டங்களில் பசி மற்றும் உணவு தட்டுப்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது போல் ராம்கார் மாவட்டத்தில் சங்கிராம்பூர் கிராமத்தில் 72 வயது உபாசி தேவி கடந்த 1ஆம் தேதி பசியால் இறந்துவிட்டார். அது போல் அவரது மகன் ஜெகன் நாயக் (48) பசியால் இறந்துவிட்டார். கூலித் தொழிலாளியான இவரால் கடந்த 1-ஆம் தேதி வருமானம் ஈட்ட முடியவில்லை.

இந்த 3 பேரும் பசிக் கொடுமையால் இறந்தனர் என்பதை மாநில அரசு மறுத்துள்ளது.

English summary
Jharkhand has reported 3 deaths as there are no jobs during lockdown, the family members alleged starvation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X