For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இதையேதானே அந்த டெய்லரும் சொன்னான்": சுவிஸ் வங்கி பட்டியலில் இந்தியர்களின் பெயர் இல்லை.. ஜேட்லி

Google Oneindia Tamil News

டெல்லி: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களி்ன் பட்டியல் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசுக்கு, சுவிட்சர்லாந்திலிருந்து தகவல் வந்துள்ளதாக ராஜ்யசபாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இதேபோலத்தான் முன்பு காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் அப்போது அதற்கு பாஜக ஆட்சேபனை தெரிவித்து வந்தது. தற்போது அதேபோன்ற பதிலை பாஜக நிதியமைச்சரும் கூறியுள்ளார்.

சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரிப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த யாருடைய பெயரும் இல்லை என்று அங்கிருந்து தகவல் வந்துள்ளதாம்.

ஆனா வெப்சைட்டில் இருக்கே

ஆனா வெப்சைட்டில் இருக்கே

இதுகுறித்து ராஜ்யசபாவில் பேசிய அருண் ஜேட்லி, இருப்பினும், சுவிஸ் தேசிய வங்கியின் இணையதளத்தில், கடந்த 2013ம் ஆண்டு இறுதியில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தின் அளவு கடந்த ஆண்டு இருந்த ரூ. 8547 கோடி என்பதிலிருந்து ரூ. 14,100 கோடியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

கடிதம் எழுதிக் கேட்டோம்

கடிதம் எழுதிக் கேட்டோம்

மேலும் ஜேட்லி கூறுகையில், ஜூன் 23ம் தேதி சுவிட்சர்லாந்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தது. அதற்கு வந்த பதிலில் பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தியர்கள் யாருமே இல்லையாம்

இந்தியர்கள் யாருமே இல்லையாம்

மேலும் அவர் கூறுகையில், ஜூலை 4ம் தேதி மத்திய அரசுக்குப் பதில் வந்தது. அதில், இந்திய குடிமக்கள், அதாவது வரி கட்டும் குடிமக்கள் யாருடைய பெயரும் எங்களிடம் உள்ள பட்டியலில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கேட்டு வருகிறோம்

தொடர்ந்து கேட்டு வருகிறோம்

சுவிட்சர்லாந்து அரசுடன் 2011ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தொடர்ந்து சுவிஸ் அரசிடம் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை அரசு கேட்டு வருகிறது.

சில கோரிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது

சில கோரிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது

அரசின் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. ஆனால் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. தங்களது நாட்டுச் சட்டம் முழுமையான தகவல்களைத் தர மறுப்பதாக சுவிட்சர்லாந்து கூறுகிறது என்றார் ஜேட்லி.

English summary
India has been told four days ago that there is no list of Indian tax residents holding assets in Swiss Banks in their own name or through structures, the Rajya Sabha was informed on Tuesday. However, the government said the Swiss National Bank on its website reported that the total deposit of Indians in their banks have increased about Rs 14,100 crore at the end of 2013 from about Rs 8,547 crore a year ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X