For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 பிரிவுதான்.. இனி சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் கிடையாது.. குஜராத் அரசு புதிய திட்டம்!

குஜராத்தில் சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என்று மண்டலங்களை பிரிப்பதை கைவிட்டுவிட்டு மொத்தமாக மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத்தில் சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என்று மண்டலங்களை பிரிப்பதை கைவிட்டுவிட்டு மொத்தமாக மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். கட்டுப்பாட்டு பகுதி, கட்டுப்பாடு இல்லாத பகுதி என்று இரண்டாக மாநிலத்தை பிரித்துள்ளனர்.

மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய ஊரடங்கில் மாநில அரசுகளுக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

No more Green, Orange and Red zone in Gujarat, Only Containment and Non-Contaiment will exist

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களாக பிரிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கண்டெயின்மெண்ட் சோன்கள் எவை என்பது குறித்தும் மாநில அரசுகளுக்கே முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நிலையில் குஜராத்தில் சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என்று மண்டலங்களை பிரிப்பதை கைவிட்டுவிட்டு மொத்தமாக மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். கட்டுப்பாட்டு பகுதி, கட்டுப்பாடு இல்லாத பகுதி என்று இரண்டாக மாநிலத்தை பிரித்துள்ளனர். குஜராத்தில் இதனால் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் பொருளாதார செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தொழில் மற்றும் சேவைகளும் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் செயல்படும். அஹமதாபாத், சூரத் , வதோதரா ஆகிய அனைத்து பகுதிகளிலும் பணிகள் துவங்கும். மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளித்த அதிகாரத்தை தொடர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்று குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமும் 160 கிலோ.. மக்களுக்கு குறைந்த விலையில் மீன் விற்பனை.. கலக்கும் திருச்சி மத்திய சிறை!தினமும் 160 கிலோ.. மக்களுக்கு குறைந்த விலையில் மீன் விற்பனை.. கலக்கும் திருச்சி மத்திய சிறை!

ஆனாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் கொரோனா பாதிப்பு போகவில்லை. அதனால் மக்கள் சுகதறதை கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார் .

குஜாரத்தில் நேற்று மட்டும் 391 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு 11380 பேருக்கு கொரோனா உள்ளது. 4499 பேர் குணமடைந்து உள்ளனர். 6222 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 659 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.

English summary
Lockdown 4.0: No more Green, Orange and Red zone in Gujarat, Only Containment and Non-Contaiment will exist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X