For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் இனி மருத்துவம் படிக்க முடியாது.. மருத்துவ கவுன்சில் புதிய அறிவிப்பு

தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இனி மருத்துவம் பயில முடியாது என மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இனி மருத்துவம் பயில முடியாது என மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக மருத்துவ கவுன்சில் நிறைய அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பின் தற்போது இன்னொரு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

No more medical seat for distance education students -MCI

இதற்கான கூட்டம் இன்று காலை மருத்துவ கவுன்சிலால் நடந்த்தப்பட்டது. இனி தொலைதூரக் கல்வி மூலம் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவம் பயில முடியாது என்று இந்த கூட்டத்தில் முடிவாகி இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் திறந்தவெளி கல்வி நிறுவனங்கள் மூலம் படித்தவர்களும் மருத்துவம் பயில முடியாது என்று மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. மருத்துவ மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதற்கு தற்போதே கடும் எதிர்ப்பு எழுந்து இருக்கிறது. இதனால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

English summary
Medical council of India says that, no more medical seat for distance education students and those who studied in open educational institutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X