For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை.. மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி

இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆதார் அட்டை வந்த பின், அது எல்லா இடங்களிலும் முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதார் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதே சமயம் ஆதார் அட்டைதான் வேண்டும் என்று சில விஷயங்களில் அரசு கட்டாயப்படுத்துகிறது.

No need of Aadhaar proof to buy sim card anymore orders, Central Telecom Department

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வரை ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களை தொல்லை செய்து இருந்தது. ஆனால் அப்படி இணைக்க தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை ஆணை பிறப்பித்தது.

இந்த நிலையில் தற்போது இனி சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. வேறு அடையாள அட்டை வைத்தும் இனி சிம் வாங்கலாம் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை கூறியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து இனி சிம் வாங்க முடியும். ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

English summary
No need of Aadhaar proof to buy sim card anymore orders, Central Telecom Department. Central Telecom Department says theat people any can give any proof to get a sim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X