For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தி கொலையில் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்க போய் மூக்குடைபட்ட வீரசாவர்கர் 'பக்தர்'

மகாத்மா காந்தி கொலையாளி கோட்சேவை காப்பாற்ற போய் உச்சநீதிமன்றத்தில் மூக்குடைபட்டிருக்கிறார் வீரசாவர்கர் பக்தர் பங்கஜ் பத்னிஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொல்லவில்லை; 4-வது குண்டு ஒன்று பாய்ந்தே உயிரிழந்தார் என உச்சநீதிமன்றத்தில் புதுக்கதைவிட்டு இப்போது மூக்குடைபட்டு நிற்கிறார் வீரசாவர்கர் மற்றும் கோட்சேவின் பக்தரான மும்பை பங்கஜ் பத்னிஸ்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே எனும் இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவன் சுட்டுப் படுகொலை செய்தான். இதனால் அவன் தூக்கிலிட்டு கொல்லப்பட்டான். அவனது தம்பி கோபால் கோட்சே ஆயுள் தண்டனை பெற்றபோதும் 1965-ம் ஆண்டே விடுவிக்கப்பட்டான்.

பங்கஜ் பத்னீஸ்

பங்கஜ் பத்னீஸ்

இது இந்த தேசத்தில் எழுதப்பட்ட வரலாறு. இந்த நிலையில் திடீரென கோட்சே ஆதரவாளரான மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பத்னிஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டார். அதில், ‘காந்தி மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆனால் கோட்சே சுட்ட 3 குண்டுகளால் காந்தி உயிரிழக்கவில்லை. 4-வது ஒரு குண்டு பாய்ந்தே மகாத்மா காந்தி உயிரிழந்தார். அந்த 4-வது குண்டு பற்றி விசாரிக்கவே இல்லை என கூறி நாட்டையே அதிரவைத்தார் பங்கஜ்,

கோட்சே நல்லவராம்

கோட்சே நல்லவராம்

அதாவது தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலைகாரன் கோட்சே கொல்லவில்லையாம்; எங்கிருந்தோ வந்த 4-வது குண்டுதான் மகாத்மாவின் உயிர் பறிப்புக்குக் காரணம் என வக்காலத்து வாங்குகிறாராம் பங்கஜ். இந்த வழக்கை விசாரிக்கலாமா? விசாரணைக்கு உகந்ததா என்பதற்காக மூத்த வழக்கறிஞர் அமரேந்தர்சரணை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்துத்துவாதிகளுக்கு மூக்குடைப்பு

இந்துத்துவாதிகளுக்கு மூக்குடைப்பு

அந்த அறிக்கைதான் பங்கஜ் போன்ற இந்துத்துவாவாதிகளுக்கு சரியான மூக்குடைப்பைக் கொடுத்துவிட்டது. கொலைகாரன் நாதுராம் கோட்சேவைத் தவிர வேறு யாருமே தேசப் பிதா மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமே இல்லை என ஒரே போடாகப் போட்டுவிட்டது அமரேந்தர் சரண் அறிக்கை, அத்துடன் இந்துத்துவா கொள்கையால்தான் கோபால் கோட்சேவே காந்தியை கொன்றது நியாயம் என வாதாடியதையும் அமரேந்தர் சரண் அறிக்கை விவரிக்கிறது,

குட்டு வாங்கிய பங்கஜ்

குட்டு வாங்கிய பங்கஜ்

ஆகையால் மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கத் தேவையே இல்லை என பங்கஜ்களுக்கு பதிலடி தந்திருக்கிறது அமரேந்தர் சரண். கோட்சேவைக் காப்பாற்ற போய் குட்டு வாங்கிவிட்டு வந்திருக்கிறார் மும்பை பங்கஜ்,

English summary
The Supreme Court was told not favouring any fresh investigation into Mahatma Gandhi’s assassination by Nathuram Godse by Amicus curiae Amarendra Sharan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X