For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”என் படுக்கையறையில் எட்டிப் பார்க்கத் தேவையில்லை”- விளாசித் தள்ளிய சானியா மிர்சா!

Google Oneindia Tamil News

டெல்லி: மண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக கேள்வி கேட்ட நிருபர்களை எனது படுக்கையறையில் எட்டிப் பார்க்கவோ, அதைப்பற்றிக் கேட்கவோ உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வார்த்தைகளால் விளாசி தள்ளியுள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சானியா மிர்சா, இந்த உலகில் ஆணாதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும், பெண் ஒருவர் சாதிப்பது என்பது கடினமான விசயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், "நாம் ஆண்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். சில சமயம் பெண்கள் அவர்களின் தேவைக்காக கடினமாக போராட வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் சமம் இல்லை:

இந்தியாவில் சமம் இல்லை:

பொதுவாக ஆண், பெண்களுக்கு ஒரே விதமான பரிசு தொகை வழங்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் நடப்பதாக தெரியவில்லை.

பெண்களுக்கு வேறு அடையாளம்:

பெண்களுக்கு வேறு அடையாளம்:

ஒரு பெண் தனது மனதில் படும் விசயங்களை பேசும் போது அவள் வேறுவிதமாக பார்க்கப்படுகின்றார். அதே சமயம் ஒரு ஆண் தனது மனதில் படுவதை வெளிப்படையாக தெரிவித்தால் அவர் லட்சியவாதியாக பார்க்கப்படுகிறார்" என்றார்.

அவமானப்படுத்தும் கேள்வி:

அவமானப்படுத்தும் கேள்வி:

இதற்கிடையில் சானியாவின் குடும்ப வாழ்க்கை தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கோபமடைந்த சானியா மிர்சா, "குழந்தைகள் இருப்பவர்கள் இது போன்று ஒருவரிடம் கேட்பது மிகவும் அவமானமான ஒன்று.

என் படுக்கையறையை எட்டிப் பார்க்காதீர்கள்:

என் படுக்கையறையை எட்டிப் பார்க்காதீர்கள்:

நான் பொதுவான ஒருவராக இருப்பதால் இது போன்று நடக்கிறது. ஆனால் யார் ஒருவருக்கும் எனது படுக்கையறையில் நடப்பது பற்றி கேட்கும் அதிகாரத்தை நான் கொடுத்துவிடவில்லை" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

English summary
Sania Mirza has been known to be vocal off the tennis court and in a no-holds-barred interview with BBC, she spoke of her travails of being a woman in a "man's world" and also had a word of caution for all those wanting to get intimate details of her family planning aspirations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X