For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங்

Google Oneindia Tamil News

ராஞ்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 30-ல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

No one Stop Ram temple Construction In Ayodhya, says Rajnath Singh

தற்போது தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இத்தேர்தல் பிரசாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் நிச்சயம் கட்டுவோம். இதனைத் தடுக்க உலகில் எந்த ஒரு சக்தியாலும் முடியாது. 1952-ம் ஆண்டு ஜனசங்க தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நாட்டில் 2 அரசியல் சாசனங்கள் இருக்க முடியாது என கூறியிருந்தார்.

அதேபோல் ஒரு தேசத்தில் 2 பிரதமர்கள், 2 கொடிகள் இருக்க முடியாது என்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கூறியிருந்தார். தற்போது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்.

லோக்சபா தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

English summary
Union Defence Minister Rajnath Singh said that, a grand Ram temple will be built in Ayodhya and no power in the world can stop that from happening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X