For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் போகாததற்குப் பல காரணங்கள்- குர்ஷித்

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையில் தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டுக்குப் பிரதமர் போகாததை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அனைத்து காமன்வெல்த் மாநாடுகளுக்கும் பிரதமர் போவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பிரதமரின் முடிவை ஒரே கோணத்தில் பார்க்கத் தேவையில்லை. அனைத்து காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டுக்கும் பிரதமர் போவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

'No single dimension to the decision': Salman Khurshid on PM skipping Commonwealth meet

தமிழகத்தில் பல பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இது போக பலவேறு முக்கியப் பிரச்சினைகள் பிரதமர் முன்பு உள்ளது. எனவே பிரதமரின் பயணம் ரத்துக்கு ஒரே காரணத்தைப் பார்க்கக் கூடாது. பல காரணங்கள் இதில் உள்ளன.

இலங்கையுடன் இந்தியாவுக்கு ஆழமான நட்பும், உறவும் உள்ளது. எனவே இந்த ஒரு விவகாரத்தால் அதில் மாற்றமோ, பாதிப்போ வராது என்று நான் கருதுகிறேன் என்றார் குர்ஷித்.

English summary
Foreign Minister Salman Khurshid, who will lead the Indian delegation to the Commonwealth meeting in Sri Lanka, has defended Prime Minister Manmohan Singh's decision to skip the event following intense pressure from Tamil politicians and ministers in the Union Cabinet. "I don't think we should look at any one single dimension to this decision. Let's not forget that the Prime Minister doesn't always go to Commonwealth (meetings)," Mr Khurshid said in an exclusive interview with NDTV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X