For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காலப்பெட்டகம் தகவல் எல்லாம் பொய்... வதந்திகளை நம்பாதீங்க... சொல்கிறது ராமஜென்மபூமி அறக்கட்டளை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பூமிக்கு கீழே காலப்பெட்டகம் புதைக்கப்படும் என்ற தகவல் குறித்து ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது.

Google Oneindia Tamil News

அயோத்தி: ராம ஜென்ம பூமி பூஜையின் போது காலப்பெட்டகம் அதாவது டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று வெளியான தகவல் பொய்யானது என அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் சம்பத் ராய் கூறியுள்ளார்.

Recommended Video

    Time capsule புதைக்கப்படும் செய்தி பொய்யானது.. ராமஜென்மபூமி அறக்கட்டளை

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்கு ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது.

    ராமர்கோவில் கட்டுமானப்பணிகளுக்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன. ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவிருக்கிறது. பிரதமர் மோடி உடன் பல மாநில முதல்வர் பங்கேற்க உள்ளனர். 250 பேர்வரை இந்த பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

    முக்கிய வழிபாட்டுத் தலங்களிலிருந்து மண்ணும், புனித நதிகளில் இருந்து வரும் தண்ணீரும் கொண்டுவரப்பட்டு, பூமி பூஜை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. புனித நதிகளில் இருந்து வரும் தண்ணீரும், ராமர் பார்வையிட்ட யாத்ரீக இடங்களிலிருந்து மண்ணும் பூமி பூஜையில் அபிஷேகாவின் போது பயன்படுத்தப்படும் என்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் மோடி பங்கேற்றால்.. பதவி பிரமாணத்திற்கே எதிரானது- ஓவைசி எச்சரிக்கைஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் மோடி பங்கேற்றால்.. பதவி பிரமாணத்திற்கே எதிரானது- ஓவைசி எச்சரிக்கை

    காலப்பெட்டகம் புதைப்பு

    காலப்பெட்டகம் புதைப்பு

    ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பூமிக்கு கீழே டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதாவது எதிர்காலத்தில் கோயில் குறித்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில் வரலாற்று தகவல்கள் அடங்கிய காலப்பெட்டகம் புதைக்கப்படும் என்று கூறப்பட்டது.

    சர்ச்சை வராமல் இருக்க நடவடிக்கை

    சர்ச்சை வராமல் இருக்க நடவடிக்கை

    ராமர் கோவில் கட்டப்பட்டது குறித்து எதிர்காலத்தில் சர்ச்சைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது. அந்த காலப்பெட்டகத்தில் என்னென்ன எழுதப்படும் என்ற தகவலும் வெளியானது.

    ராம ஜென்ம பூமி அறக்கட்டளை

    ராம ஜென்ம பூமி அறக்கட்டளை

    இந்த காலப்பெட்டகத்தை ஒரு செப்புத்தகடுக்குள் வைத்து புதைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலுக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.

    வதந்திகளை நம்பாதீங்க

    வதந்திகளை நம்பாதீங்க

    ராம ஜென்ம பூமி பூஜையின் போது காலப்பெட்டகம் அதாவது டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்று வெளியான தகவல் பொய்யானது என அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    Ram Janmabhoomi Teerth Kshetra Trust General Secrerary Champat Rai rejected media reports that a time capsule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X