For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.11 வரதட்சணை, விருந்தாளிகளுக்கு டீ: மோடியால் இப்படியும் நடந்த திருமணம்

By Siva
Google Oneindia Tamil News

நொய்டா: கையில் பணம் இல்லாமல் மக்கள் அல்லாடும் நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒருவர் மணமகனுக்கு ரூ.11 வரதட்சணை கொடுத்து விருந்தாளிகளுக்கு டீ கொடுத்து மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நாட்டோக்கி மதியா கிராமத்தை சேர்ந்தவர் மகாவீர் சிங். அவரின் மனைவி கியானோ. மாற்றுத்திறனாளிகளான அவர்களின் மகள் சஞ்சு. அவருக்கும், அலிகாரில் உள்ள சபேதாபுராவை சேர்ந்த டிரைவர் லோகேஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Noida Family serves tea during daughter's wedding, gives Rs 11 to bridegroom

ஏழைகளான அவர்கள் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் திருமணத்தை நடத்த பணம் இல்லாமல் அல்லாடினர்.

இதை பார்த்த லோகேஷ் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தினால் போதும் என்றார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருமணம் நடந்தது.

மணமகன் லோகேஷுக்கு ரூ.11 வரதட்சணை அளிக்கப்பட்டது. மேலும் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு டீ மட்டும் கொடுத்து எளிமையாக நடத்தினர்.

English summary
Amid unprecedented cash crunch, a poor family in Greater Noida have organised the marriage of their daughter by serving tea to the guests and offering only Rs 11 to the bridegroom as their blessings, setting examples for others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X