For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசியில் நோக்கியாவும் வெடித்துவிட்டது.. போன் பேசும்போதே மரணம் அடைந்த ஒடிசா கல்லூரி பெண்

நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேசிக்கொண்டிருக்கும் போது போன் வெடித்து பெண் உயிரிழப்பு- வீடியோ

    புபனேஷ்வர்: நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். போனில் பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

    இவரது முகம் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    பொதுவாக நோக்கியா மாடல் மொபைல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படும். ஆனால் தற்போது அந்த நிறுவன மொபைல் ஒன்றே வெடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேசிக்கொண்டே இருக்கும் போது

    பேசிக்கொண்டே இருக்கும் போது

    ஒடிசா அருகே இருக்கும் கெய்ராகனி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உமா ஓரம் என்ற 18 வயது மாணவி போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது சூடு தாங்காமல் அந்த இடத்திலேயே போன் வெடித்துள்ளது. போன் வெடித்ததில் அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    தலை உடைந்தது

    தலை உடைந்தது

    இதில் அந்த பெண்ணின் தலை உடைந்து ரத்தம் வெளியே தெறித்துள்ளது. ஆனாலும் அந்த பெண் உயிருக்கு போராடி இருக்கிறார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார். கைகளிலும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    சார்ஜ் போட்டு இருந்தார்

    சார்ஜ் போட்டு இருந்தார்

    அந்த பெண் போன் பேசும் போது சார்ஜ் போட்டுக் கொண்டே பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோக்கியா நிறுவனம் மீது அந்த பெண்ணின் குடும்பம் வழக்கு தொடுக்க உள்ளது. பொதுவாக சாம்சங் மாடல் மொபைல்கள் சமீப காலங்களில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. தற்போது நோக்கியாவிற்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது.

    நோக்கியா பதில்

    நோக்கியா பதில்

    இந்த விஷயத்தில் நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு ''இந்த விஷயம் மிகவும் துக்ககரமானது. அந்த நோக்கியா போனின் மாடல் நோக்கியா 5233 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது என்று விசாரிக்கப்படும். இதில் கண்டிப்பாக எங்களுடைய தவறு எதுவும் இருக்காது என்று நம்புகிறோம்'' என்றுள்ளனர்.

    English summary
    Nokia Phone blasts kill a college girl named Uma Oram in Kheriakani district of Odisha. Nokia, says that it was not their fault.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X