For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலவரமாகும் போராட்ட களம்.. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நேற்று முதல் நாளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது?

    கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நேற்று முதல் நாளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.

    இதனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன போராட்டம்

    என்ன போராட்டம்

    இந்த மசோதாவிற்கு எதிராக நேற்று முதல் நாளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அசாம் மற்றும் திரிபுராவில் அதிக அளவில் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் 11 மணி நேரத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்ட போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.

    யார் செய்கிறார்கள்

    யார் செய்கிறார்கள்

    வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்புதான் இதில் முன்னிலையி வகிக்கிறது. இவர்களுக்கு ஏஐயுடிஎஓ, அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிர்சாக் முக்தி சங்கரம் சமிதி, அருனாச்சல பிரதேச மாணவர் சங்கம், நாகா மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேச மக்கள் ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் வங்கதேசத்துடன் உறவு மொத்தமாக பாதிக்கப்படும். இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவில் அகதிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருவார்கள்.

    மோசமாகும்

    மோசமாகும்

    இதனால் வடகிழக்கு மாநிலத்தின் தோற்றமே மாறும். அங்கு அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் நடக்கும். அதேபோல் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் பலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுதான் அங்கு மக்கள் போராட்டம் செய்ய காரணம்.

    என்ன கலவரம்

    என்ன கலவரம்

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேற்கு வங்கம், நாகலாந்து. அசாம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. போலீசார் மக்கள் மீது கடுமையான தாக்குதலும் நடத்தி உள்ளனர்.

    English summary
    Northeast protest against Citizenship Amendment Bill turns into a riot due to police attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X