For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது?

தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நாடு முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தற்போதும் அடித்து ஆடி வருகிறது.

[ பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. வாகன ஓட்டிகள் பெரும் அவதி! ]

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்கள் பலத்த மழையை பெற்றன. கேரளாவில் கொட்டிய மழையால் அம்மாநிலம் வரலாறு காணாத சேதத்தை சந்தித்தது.

வரலாறு காணாத சேதம்

வரலாறு காணாத சேதம்

கேரளாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அனைத்து மாநிலங்களில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

இமாச்சலில் வெளுக்கும் மழை

இமாச்சலில் வெளுக்கும் மழை

இந்நிலையில் தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது இமாச்சலில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.

33 சதவீத்ம் அதிகம்

33 சதவீத்ம் அதிகம்

செப்டம்பர் மாதத்தில் இமாச்சல பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்கிறது. கடந்த 4 தினங்களில் அங்கு இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

29ஆம் தேதி நிறைவடைகிறது

29ஆம் தேதி நிறைவடைகிறது

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 29ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைகிறது.

29ஆம் தேதி முதல் தொடங்கும்

29ஆம் தேதி முதல் தொடங்கும்

தென்மேற்கு பருவமழை நிறைவடையும் அன்றைய நாளில் இருந்தே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

சாதகமாக இருக்கும்

சாதகமாக இருக்கும்

தமிழகத்துக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக முறையாக பெய்யவில்லை. இதனால் ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Meteorological center has said Northwest monsoon will start on 29th of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X