For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டி பிடிப்பது, கண் அடிப்பது, கதையடிப்பது சரியில்லை.. ராகுல் காந்தியை கண்டித்த சபாநாயகர் சுமித்ரா

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தனது உரைக்கு பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: லோக்சபாவின் உள்ளே கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை என்று ராகுல் காந்தியின் செயல்பாடுகளுக்கு தனது அதிருப்தியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வெளிப்படுத்தியுள்ளார்.

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியையும், அரசையும் கடுமையாக விமர்சித்தார். அவற்றை சிரித்தபடியே கடந்தார் மோடி.

    Not opposed to hug, but decorum of the House must be maintained, says speaker

    உரையை முடித்த பிறகு, நான் அன்பை மட்டுமே வலியுறுத்துகிறேன், வெறுப்பை கிடையாது என கூறியபடி, பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கே சென்று அவரை கட்டியணைத்தார் ராகுல் காந்தி.

    பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, அருகேயிருந்த உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்ததோடு, கண்ணடித்தார். கேரள நடிகை பிரியா வாரியரை போல ராகுல் கண்ணடித்ததாக, சமூக வலைத்தளங்களில் கேலி ஆரம்பித்துள்ளது.

    இந்த நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையில் கூறுகையில், நான் யாரையும், யாரும் கட்டி பிடிக்க கூடாது என கூற விரும்பவில்லை. நானும் ஒரு தாய்தான். ஆனால், நடந்து கொண்ட விதம்தான் சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது, பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியை மென்மையாக கண்டித்தார்.

    English summary
    Speaker Sumitra Mahajan comments on Rahul Gandhi's hug to PM Modi after his speech in the Lok Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X