For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகலா?: உத்தவ் தாக்கரே விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இதுவரையில் முடிவு எடுக்கப்படவில்லை என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வருகிற 15-ந் தேதி நடைபெறும் நிலையில், பாஜக-சிவசேனா கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி முறிந்தது.

தனித்துப் போட்டி

தனித்துப் போட்டி

தற்போது சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிவசேனாவை சேர்ந்த ஆனந்த் கீதே மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக நீடித்து வருகிறார்.

ராஜ்தாக்கரே எதிர்ப்பு

ராஜ்தாக்கரே எதிர்ப்பு

இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கூட்டணி முறிவு ஏற்பட்டு உள்ள நிலையில், மத்திய அரசுடன் சிவசேனா உறவு வைத்து இருப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். மேலும் ஆனந்த் கீதே உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனந்த் கீதே ராஜினாமா?

ஆனந்த் கீதே ராஜினாமா?

இந்த நிலையில் திடீர் திருப்பமாக மத்திய அமைச்சர் ஆனந்த் கீதேயை பதவி விலகுமாறு அவருக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

உத்தவ் தாக்கரே விளக்கம்

உத்தவ் தாக்கரே விளக்கம்

ஆனால் தற்போது உத்தவ் தாக்கரே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இதுவரையில் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

42 எம்.பிக்களும் ராஜினாமா...

42 எம்.பிக்களும் ராஜினாமா...

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 42 எம்.பி.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தால் இதுநடக்கும் என்றார் உத்தவ் தாக்கரே.

English summary
A day after announcing that Union Heavy Industries Minister Anant Geete would resign from the Modi government, Shiv Sena chief Uddhav Thackeray said on Tuesday that, as of now, there is no proposal to pull out of the NDA government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X