For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் கட்சிகளின் கனவுகளை கலைத்துவிட்ட நோட்டா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற வாசகத்தை ஏற்க மறுத்த மக்கள்- வீடியோ

    டெல்லி: குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்துள்ள நிலையிலும், காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட செல்வாக்கு அதிகமாகியுள்ள நிலையிலும், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

    எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை என்பதை தேர்வு செய்யவே நோட்டா என்ற வாய்ப்பு தரப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலில் இந்த நோட்டா பிரிவில் இதுவரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மொத்த வாக்குகளில் சுமார் 2% நோட்டா வாங்கியுள்ளது.

    தேசிய கட்சிகளைவிட

    தேசிய கட்சிகளைவிட

    சுவாரசியம் என்னவென்றால், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய தேசியக் கட்சிகளின் வாக்குப் பங்கை விட இது அதிகமானது.

    அதிக நோட்டா

    அதிக நோட்டா

    குஜராத்தின் சோம்நாத், நரன்புரா, காந்திதாம் ஆகிய தொகுதிகளில் நோட்டா கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதாம். இத்தொகுதிகள் பின்தங்கிய பகுதிகள் என்பது கவனிக்கத்தக்க்து.

    வாக்கு வித்தியாசம்

    வாக்கு வித்தியாசம்

    போர்பந்தரில் பாஜக வேட்பாளர் பாபுபாய் பொகாரியா 1,855 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இங்கு நோட்டாவுக்கு 3,433 வாக்குகள் விழுந்துள்ளன.

    மாறியிருக்கும்

    மாறியிருக்கும்

    காங்கிரசின் எதிர் கோஷ்டியான வகேலா அணியினர், சுயேச்சைகளும், நோட்டாவும் வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு க்ளோஸ் போட்டியில் என்ன வேண்டுமானாலும் மாறி நடந்திருக்க வாய்ப்பிருந்தது.

    English summary
    According to numbers released by the Election Commission at around 2pm, NOTA raked in 1.8 per cent, or 5,18,235, of all votes polled in the Gujarat assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X