For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிமானிடைசேஷன் புரியல.. மோசமான நடவடிக்கை.. அன்றே கணித்த நோபல் வெற்றியாளர் அபிஜித்.. எச்சரிக்கை!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி அப்போதே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    India-Born Abhijit Banerjee Win Nobel For Economics | சல்யூட்..சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை

    டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி 2016லேயே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி 2019ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்று இருக்கிறார். அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான இவர்கள் செய்த ஆய்வுதான் இந்த பரிசுக்கு காரணம். இவர் குறித்த சுவாரசிய தகவல்கள் செய்திகள் தற்போது வெளியாகி வருகிறது.

     பெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்?! பெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்?!

    எப்படி இருந்தார்

    எப்படி இருந்தார்

    இந்த நிலையில் 2016ல் பணமதிப்பிழப்பு குறித்து அபிஜித் அளித்த பேட்டியில், என்னால் இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் மூலம் எந்த விதத்திலும் கருப்பு பணம், ஊழலை ஒழிக்க முடியாது. அதே சமயம் இது பொருளாதார ரீதியாக நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும்.

    கஷ்டம்

    கஷ்டம்

    நாம் தற்போது கஷ்டப்படுவதை விட எதிர்காலத்தில் இது மோசமான விளைவுகள், சிக்கல்களை ஏற்படுத்தும். பல நிறுவனங்கள் திவால் ஆகும். இந்தியாவில் 85 சதவிகிதம் பேர் கையில் நேரடியாக பணம் பெற்று வேலை பார்க்கிறார்கள். அவர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

    ஊழல் என்ன

    ஊழல் என்ன

    அதேபோல் இதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியாது. 1000 ரூபாயை தடை செய்துவிட்டு, 2000 ரூபாயை கொண்டு வந்தது பெரிய தவறு. அது இன்னும் எளிதாக ஊழல் செய்ய வழிவகுக்கும். இது பெரிய பொருளாதார பிரச்சனைகளை இந்தியாவிற்கு கொண்டு வரப்போகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    உண்மை இதுதான்

    உண்மை இதுதான்

    இதனால் எப்படி இந்தியாவிற்கு நல்லது என்று சொல்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்று அபிஜித் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அப்போது பாஜகவினர் பலர் உங்களுக்கு என்ன தெரியும் என்று கலாய்த்தனர். தற்போது அபிஜித் பானர்ஜி சொன்னது போலவே இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.

    English summary
    Note ban is not good, it will make India's economy worst warned Nobel winner Abhijit in 2016.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X