For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெ.தேசம் புதைகுழிக்கு போச்சுன்னும் சொன்னாங்க.. மீண்டும் வந்தோமே.. சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrababu Naidu: முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்.எல்.ஏ உத்தரவால் பரபரப்பு- வீடியோ

    அமராவதி: தெலுங்குதேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவியதைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும் தோல்விகளில் இருந்து மீண்டு எழுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    லோக்சபா தேர்தலில் தெலுங்குதேசம் படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலிலும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்தது.

    இதையடுத்து தெலுங்குதேசம் கட்சியில் சலசலப்புகள் வெடிக்கத் தொடங்கின. இதன் முதல் கட்டமாக 6 ராஜ்யசபா எம்.பிக்களில் 4 பேர் தங்களை பாஜகவில் இணைத்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இவர்களில் 3 பேர் பாஜக செயல் தலைவர் நட்டாவை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தனர்.

    'ஆந்திரா மல்லையாக்களை' வளைத்துப் போட்ட பாஜக... 2 எம்.பிக்கள் ரெய்டுகளில் சிக்கியவர்கள்!'ஆந்திரா மல்லையாக்களை' வளைத்துப் போட்ட பாஜக... 2 எம்.பிக்கள் ரெய்டுகளில் சிக்கியவர்கள்!

    தற்போது ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் சென்றிருக்கக் கூடிய சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த கட்சித் தாவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் திருப்பங்கள் தொடர்பாக அடுத்தடுத்து ட்வீட் பதிவுகளைப் போட்டு வருகிறார். அப்பதிவுகளில் சந்திரபாபுந நாயுடு பதிவிட்டுள்ளதாவது:

    சிறப்பு அந்தஸ்து

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில்தான் பாஜகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆந்திராவின் எதிர்காலத்துக்கும் பல கோடி ஆந்திரா மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு பாஜகவுடன் நட்பு பாராட்டுவது என்பது எனக்கு எளிதானதுதான். ஆனால் நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன்.

    மக்களின் உரிமை போராட்டம்

    மக்களுக்கு எது நல்லதோ அதைமட்டுமே நான் செய்து வருகிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதையே செய்வேன். ஆந்திரா மக்களின் உரிமைகளுக்கு நான் போராடியதன் விளைவாக தெலுங்குதேச எம்பிக்கள் கட்சி தாவியுள்ளனர். ஏனெனில் அவர்கல் தங்களது சொந்த பிரச்சனைகளுக்காகத்தான் பாஜகவுக்கு மாறியுள்ளனர்.

    மீண்டும் வந்தோம்.. .வருவோம்

    இப்படியான பிரச்சனைகள் எனக்கோ, கட்சிக்கோ புதியது அல்ல. தெலுங்குதேசம் கட்சி செத்து போய்விட்டது என பலரும் சொன்னார்கள்... தெலுங்குதேசத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றார்கள்... தெலுங்குதேசத்தை விட்டு அக்கட்சித் தலைவர்கள் ஓடிவிட்டார்கள் என்றார்கள்.. கட்சி புதைகுழிக்கு போய்விட்டது என்றனர்.. ஆனால் நாங்கள் மீண்டும் வந்தோம்.

    நம் வரலாறு மீண்டும் வரும்

    லட்சக்கணக்கான தொண்டர்கள், கோடிக்கணக்கான தெலுங்கு மக்கள் எங்களுக்குப் பின்னால் இருக்கின்றனர். வரலாறு மீண்டும் வரும். இதில் கவலைப்பட எதுவுமே இல்லை.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.

    English summary
    TDP President Chandrababu Naidu tweet in his page, TDP MPs joining BJP today is the result of my fight for AP's rights. They had their own personal agendas to address.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X