For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதீத அன்பால் கன்னியாஸ்திரியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தோழி... கேரளாவில் பயங்கரம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கன்னியாஸ்திரிகள் மடத்தில் அதீத அன்பு காரணமாக தனது தோழியை மற்றொரு கன்னியாஸ்திரி மாணவியே எரித்துக் கொல்ல முயற்சி செய்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே பரவூரில் 9 மாணவிகள் படிக்கும் கன்னியாஸ்திரிகள் மடம் ஒன்று உள்ளது. இதில்,அதேபகுதியைச் சேர்ந்த டெல்பி (24) மற்றும் ரேச்சல் (21) என்ற மாணவிகள் ஒன்றாக தங்கி படித்து வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒன்றாக படித்து வரும் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

ஆனால், கடந்தமாதம் பயிற்சிக்காக டெல்பியை மற்றொரு மாணவியுடன் சேர்த்து மூன்று மாதங்கள் ஆந்திரா அனுப்பி வைக்க மட நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சண்டையின் போது டெல்பியை ரேக்சல் அடித்துள்ளதாகத் தெரிகிறது.

தோழியை பிரிய மனமில்லாமல் தவித்த ரேக்சல், தோழியின் ஆந்திர பயணத்தை தடுத்து விட திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த மாதம் 30ம் தேதி சமையலறை பணியில் இருந்த ரேச்சல் யாருக்கும் தெரியாமல் மண்ணெணெய்யை எடுத்து மறைத்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று இரவு தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த டெல்பி மீது, சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து ஊற்றிய ரேச்சல், தீயை பற்ற வைத்து விட்டு ஓடி விட்டார்.

டெல்பியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த மற்ற மாணவிகள் மடத்தின் நிர்வாகிகள் உதவியுடன் அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டெல்பியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் 45 சதவீதம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருவனந்தபுரம் போலீசில் அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், ரேச்சல் கைது செய்யப் பட்டார்.

English summary
A 24-year-old woman training to be a nun suffered 45% burns after another novice poured kerosene on her while she was sleeping and set her ablaze at St. Anne's Convent in North Paravoor, Tiruvananthapuram on May 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X